YMMA CENTRAL TEAM, IR வெப்பமானிகளை கொழும்பு 09 கைரியா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு நேற்றைய தினம் (13) வழங்கி வைத்தது. இது தொடர்பான கோரிக்கை பாடசாலை நிர்வாகத்தினரால் ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி வெப்பமானிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றதுடன், நிகழ்வில் பாடசாலையின் அதிபர் திருமதி நஸீரா, பிரதி அதிபர் திருமதி காதர், உப அதிபர் பரீனா ஆகியோர் கலந்து கொண்டனர். (படத்தில் வலமிருந்து இடமாக)

மேலும் YMMA CENTRAL TEAM சார்பாக அதன் தலைவர் நஸாரி காமில், உப தலைவர் அஹ்மத் சலாஹுதீன், உப செயலாளர் அப்துல் அலீம், மற்றும் உறுப்பினர்களான இர்ஷாத், அர்ஷத் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.