13 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒரு சொல்லேனும் பேசப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான உதய பிரபாத் கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சரவையில் விடயமொன்றில் தீர்மனம் மேற்கொள்வதற்கு நீண்ட நாள் செல்லக்கூடும், ஆனால் 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் குறித்து அமைச்சரவையில் விரைவாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து பேச்சப்பட்டதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் அமைச்சரவையில் ஆராயப்பட்ட பின்னர் பாராளுமன்றத்தில் 3 வாரத்தின் பின்னர் சமர்ப்பிக்கப்படும். பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடனே இது நிறைவேற்றப்படும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்பொழுது மேற்கொண்டுள்ளது.

இந்த திருத்தத்திற்கு எதிராக எவராவது நீதி மன்றம் சென்றால் மேலும் 3 வார காலம் செல்லும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். புதிய அரசியல் யாப்பு விரிவாக ஆராயப்படாமல் அரசாங்கம் ஒருபோதும் நிறைவேற்றாது.

சகல தரப்பினரும் கருத்துக்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். புதிய அரசியல் யாப்பு வகுப்பது ஒருவிடயம். இதற்கு பிரசித்திபெற்ற யாப்பு சட்டத்தரணி ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த குழுவே இதனை ஆராயும் என்று தெரிவித்த அமைச்சர் 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து விளக்கமளிக்கையில் முன்னைய அரசாங்கமும் சர்வதேசமும் இது குறித்து திருப்தி கொண்டிருக்கவில்லை.

நாட்டின் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்க வேண்டுமா? சபாநாயகரிடம் இருக்கவேண்டுமா? என்ற இழுவறி நிலை நிலவியது. இதனால் நாட்டை முன்னெடுக்க முடியாதிருப்பதாக முன்னால் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்காகவே அரசியல் யாப்பில் 20 ஆவது திருத்தத்தை மேற்கொண்டு நாட்டை முன்னெடுப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

20ஆவது அரசியல் அமைப்பு திருத்தம், 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பு திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்காக மக்கள் அரசாங்கத்திற்கு ஆணையை வழங்கியுள்ளனர்.

எந்த சந்தர்ப்பத்திலும் 3 இல்2 பெரும்பான்மையை பெறமுடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ஜெ.ஆர்.ஜயவர்தன தெளிவாக தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த பொது தேர்தலில் மக்கள் இந்த நிலைப்பாட்டை புறந்தள்ளி சமகால அரசாங்கத்திற்கு 3 இல் 2 பெரும்பான்மையை வழங்கியுள்ளார்.

முன்னைய அரசாங்கத்திலும் புதிய அரசியல் யாப்புக்காக யாப்பு ஒன்று வரையப்பட்டுள்ளது. அதிலிருந்த சில விடயங்களில் கவனம் செலுத்த முடியும் அல்லவா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் அந்த யாப்பு திட்டத்தில் நாட்டை சமஸ்டியாக பிரிப்பதற்கான விடயங்கள் உண்டு அதனால் அதனை எற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.