சவுத்தாம்டனில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் ஆஸி. அணி 05 விக்கட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வெற்றிக் கொண்டது. இந்த போட்டியில் ஆஸி. அணி வெற்றி பெற்ற போதும் தொடர் 2-1 எனும் கணக்கில் இங்கிலாந்து வசமானது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆஸி. அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சார்பில் ஜோன் பெயார்ஸ்டோ பொறுப்பாகவும் நிதானமாகவும் ஆடி அறைச்சதம் அடித்தார். அவர் 55 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். ஏனைய வீரர்கள் எவரும் 30 என்ற ஓட்ட எண்ணிக்கையினை கூட எட்டவில்லை.


இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 145 ஓட்டங்களை பெற்றது. ஆஸி. அணி சார்பில் பந்து வீச்சில் சம்பா 02 விக்கட்டுகளை பதம் பார்த்தார்.

146 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணி 19.3 ஓவர்களில் 05 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்நது. 

ஆஸி.அணி சார்பில் பின்ச் மற்றும் மிசல் மார்ஸ் ஆகியோர் தலா 39 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.பந்து வீச்சில் ஆதில் ரசித் 03 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஆஸி. அணியின் மிசல் மார்ஸ் தெரிவான அதேவேளை போட்டித் தொடரின் நாயகனாக இறுதிப் போட்டியில் ஆடாத இங்கிலாந்து அணியின் பட்லர் தெரிவானார்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.