20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையத்தில் நேற்று ,டம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் ,துபற்றி தெரிவிக்கையில் திருத்த சட்ட மூலத்தை அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாட்டின் அரசியலில் வலுவான சக்தியாக மாறியுள்ளது. பசில் ராஜபக்ஷ மூன்றில் ,ரண்டு பெரும்பான்மை அதிகாரத்தின் மூலம் கட்சிக்கு மகத்தான வெற்றியை ஈட்டித்தந்துள்ளார். நாட்டின் சகல பகுதிகளிலும் அதிகாரத்தை கைப்பற்றி பெரமுனவை அனைத்து மக்களுக்குமான கட்சியாக மாற்றுவது கட்சியின் ,லக்காகும் என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.