தரம் 5 ஐ சேர்ந்த மூன்று மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த Security Guard கைது!

Rihmy Hakeem
By -
0


  5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை பாதுகாவலர் (security guard) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் குறித்த மாணவிகளின் பெற்றோர்களிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் வைத்திய பரிசோதனைகளுக்காக சந்தேக நபர் மற்றும் குறித்த மாணவிகள் குருநாகல் வைத்தியசாலைக்கு அனுபப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Adaderana 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)