மாடறுப்பதனை தடை செய்யும் பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Rihmy Hakeem
By -
0

 

நாட்டில் மாடுகளை அறுப்பதற்கு தடை விதிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

மேலும் குறித்த விடயத்தை மறு ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை நியமிக்க நேற்றைய (28) அமைச்சரவைக் கூட்டத்தின் போது முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை கூட்டம் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் கூடியது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே செப்டம்பர் 08 அன்று நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின் போது மாடறுப்பை தடை செய்யும் ஆலோசனையை முன் மொழிந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)