தேங்காயின் விலை 100 ரூபா வரையில் அதிகரிக்கக் கூடுமென தெங்கு உற்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 70 ரூபாவில் இருந்து 80 ரூபாவரையில் காணப்படுகின்ற நிலையில் எதிர்வரும் நாட்களில் அவ்விலைகளில் மாற்றம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 250 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்து வருவதோடு அதில் 150 மில்லியன் தேங்காய்கள் மக்களின் பாவனைக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெங்கு உற்பத்தியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளினால் வீழ்ச்சி அடையாலாம் என தெங்கு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Kesari)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.