29.71 கிராம் ஹெரோயின் போதை பொருளை தம்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றத்திற்காக 28 வயதான ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கொழும்பு மட்டக்குளி பள்ளிய வீதியில் வசிக்கும் நுவன் சஜ்ஜீவ என்பவருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இவ்வாறு மரண தண்டனை விதித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி கொழும்பு இங்குறுகடை சந்தியில் 29.71 கிராம் பெறுமதியான ஹெரோயின் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றத்திற்காக துறைமுக ஊழல் ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ஹெரோயின் போதை பொருளை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றத்திற்காக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சந்தேக நபருக்கு எதிராக அதிகுற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் நீண்ட வழக்கு விசாரணைக்கு பின்னர் ஹெரோயின் போதை பொருளை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றங்கள் சந்தேகமின்றி நிரூபணமாகின.

இதன்படி 28 வயதான குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க மரண தண்டனை விதித்துள்ளார்.


Adaderana 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.