கொரோனா தொற்று பாதிப்புடன் இலங்கையில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது.

சற்று முன்னர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கடந்த இரண்டாம் திகதி பஹ்ரைனில் இருந்து நாடு திரும்பி சிலாபம், அம்பகஹவெல தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த போது இவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் இன்றைய தினம் (14) மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 

மேலும் குறித்த நபரையும் சேர்த்து இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3235 ஆக உயர்வடைந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.