எம்.ஜே.எம் பாரிஸ்

கொலையுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஒருவரை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் , தேவையானால் சபாநாயகர் தூக்கு மேடையை பாராளுமன்றத்திற்கு எடுத்து வந்து பொருத்தி வைக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மினுவங்கொட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது:-

தற்போதைய நிலவரத்துக்கு அலுகோசுவின் கடமையை சபாநாயகர் செய்ய முடியும் எனவும் , அதேவேளை 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் காரணமாக மிகவும் சிரமப்பட்டு நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த சுதந்திரம் மற்றும் பலம் இல்லாமல் போகும் விதத்தை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை என்பதால் 20வது திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றோம்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக நாடு முன்னோக்கி செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. இது 19வது திருத்தச் சட்டத்தின் தவறல்ல.

அன்றைய தலைவர்களாக இருந்த ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோரின் பலவீனம் காரணமாக அதனை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாமல் போனது என பாரளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.