புத்தளம் கல்வி வலயத்தின் முன்னாள் பிரதி கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் A.J.M.ஜலீல் அவர்களின் நிதியுதவியுடன் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் வழங்கல் கட்டமைப்பு மற்றும் திருத்தம் செய்யப்பட்ட வகுப்பறைகளை மாணவர்களது பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு நாளைய தினம் (28) பாடசாலை வளாகத்தில் பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகும்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேஷபந்து உபுல் மஹேந்திர ராஜபக்ச கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன், விசேட அதிதிகளாக மேலும் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக நிகழ்வின் பிரதான ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ் பிர்தவ்ஸ் JP தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு பல்வேறு தரப்பினருக்கும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், SDEC, OBA, OGA, நலன்புரி சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேரடி ஒளிபரப்பு - https://www.facebook.com/Siyanemediacircle/

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.