களுத்துறை சிறைச்சாலையில் இருந்து தப்பியோடிய பெண் சிறைக் கைதி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கைதி ஹொரண பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக களுத்துறை வடக்கு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

ஹெரோயின் போதை பொருள் குற்றச்சாட்டில் கைதான குறித்த பெண் கைதி நேற்று (08) மாலை சிறைச்சாலை கூரையை உடைத்து தப்பித்திருந்தார்.

களுத்துறை பமுணுகம பகுதியில் வைத்து 1,300 மில்லி கிராம் ஹெரோயினுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதற்கமைய நீதிமன்ற உத்தரவிற்கமைய அவர் சிறை வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Adaderana.lk 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.