(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு எவ்வித பாதிப்பும் வராது. மாகாண சபைகளில் காணப்படுகின்ற குறைகள் திருத்தம் செய்யப்பட்டு அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமையில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் மாகாண சபை உறுப்பினர் ஒன்றியத்தின் தலைவர் காஞ்சன ஜயரத்ன தெரிவித்தார்.

மாகாண சபைகள் தேர்தல், அரசியமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கடந்த வாரம் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர், இராஜாங்க அமைச்சர் ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் வினவியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் தேவைகளையும், ஒரு சில மாகாண சபைகளில் காணப்படுகின்ற குறைப்பாடுகளையும் கொண்டு மாகாண சபை முறைமையை இரத்து செய்ய முடியாது. இந்திய பிரதமரும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கடந்த வாரம் இணையவழி கலந்துரையாடலில் பங்குப்பற்றினார்கள். அரசியமைப்பின் 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமை தொரபில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஒரு சில மாகாண சபைகளில் குறைபாடுகள் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் வடக்கு மாகாண அபிவிருத்திக்காக மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதி மீள மத்திய அரசாங்கத்திடமே கையளிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாகாண சபைகள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டது. இவ்விடயத்தில் தொடர்புடை ய தரப்பினர் பொறுப்பு சூற வேண்டும்.

மாகாண சபை தேர்தல் உரிய காலத்தில் இடம்பெற்றிருந்தால் மாகாண சபை முறைமை, அரசியமைப்பின் 13 ஆவது திருத்தம் ஆகியவை தொடர்பில் தேவையற்ற விமர்சனங்கள் எழுந்திருக்காது. கடந்த அரசாங்கம் பொறுப்பற்ற விதமாக செயற்பட்டமையின் காரணத்தினால் மக்கள் அந்த அரசாங்கத்தை புறக்கணித்து பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பலமாக ஸ்தாபித்துள்ளார்கள்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கும், மாகாண சபை முறைமைக்கும் எவ்வித பாதிப்பும் அரசாங்கத்தில் ஏற்படாது. ஒரு சில மாகாண சபைகளில் குறைபாடுகள் காணப்படுகின்றன அவற்றை திருத்தி பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். முதலாம் காலாண்டில் மாகாண சபை தேர்தல் இடம் பெறுவதற்கான சாத்தியம் காணப்படுகிறது என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.