(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கம் முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தம் அனுமதிக்கப்பட்டால் பாராளுமன்றம் தபால் நிலையம் போன்று ஆகிவிடும் என்றுத் தெரிவித்த முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, கொண்டுவரப்படும் அனைத்து பிரேரணைகளையும் அங்கிகரித்து முத்திரை ஒட்டும் வேளையை மாத்திரமே பாராளுமன்றம் மேற்கொள்ள வேண்டிவரும் என்றும் கூறினார்.

அத்துடன் ஜனாதிபதிக்கு நாட்டை கொண்டுசெல்ல 19ஆவது திருத்தத்தில் எந்த தடைகளும் இல்லை. அவ்வாறு இருக்குமானால் அதனை அறிந்துகொள்ள நாங்களும் விருப்பம். அதனால் அரசாங்கம் 20ஆவது திருத்தத்தை அவசரப்பட்டு கொண்டுவந்து நாட்டுக்குள் பிரச்சினையை அதிகரிக்கக்கூடாது எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தினூடாக மேற்கொள்ள எதிர்பார்க்கும் அடிப்படை மாற்றங்கள் எனும் தலைப்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.