20 ஆவது அரசியலமைப்புத் திருத்த நகல் சட்டமூலத்தில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்வற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் குறைகளை நிவர்த்திசெய்திருக்கும் என்று தான் நம்புவதாக அமைச்சரவைப் பேச்சாளர் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அனைவரினதும் இணக்கப்பாட்டிற்கு அமைய, மிகவும் ஜனநாயக ரீதியான திட்டங்களை முன்வைப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் தேசிய வானொலிக்கு தெரிவித்துள்ளார்.

மக்களின் அபிலாஷைகளை எடுத்தியம்பும் அரசியல் அமைப்பொன்று நாட்டிற்கு அவசியம் என்று தெரிவித்துள்ள அமைச்சர் , 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த நகல் சட்டமூலம் தொடர்பான விடயங்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.