பாகிஸ்தான் நாட்டின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) முஹம்மத் சாத் கட்டாக்,  நீதி அமைச்சர் அலி சப்ரியை, அவரது அலுவலகத்தில் இன்றைய தினம் (21) சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், புதிதாக நியமனம் பெற்ற  நீதி அமைச்சருக்கும் ,  புதிய  அரசாங்கத்துக்கும் உயர்ஸ்தானிகர் தன்னுடைய  வாழ்த்துக்களை தெரிவித்தார். 

மேலும், நீண்ட காலமாக இரு நாடுகளும் பேணிவரும் வலுவான இருதரப்பு உறவினையும்  பாராட்டியுள்ளார்.

இச்சந்திப்பில்,  பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள், பரஸ்பர ஒத்துழைப்பு உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பில்  கலந்துரையாடப்பட்டுள்ளன.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.