குரங்குகளினால் உற்பத்திகளுக்கு ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவிருப்பதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.சி.சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குரங்குகளினால் உற்பத்திக்கு ஏற்படும் பாதிப்பின் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.