வீதி நிரல் விதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக 2,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதி நிரல் விதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக மோட்டார் வானக சட்டத்தின் பொது தண்டணைக்கு அமைவாக ஆக குறைந்தது தண்டப்பணமாக 2,000 ரூபா விதிக்க முடியும்.

பஸ்சிற்காக ஒதுக்கப்பட்டுள்ள வீதி நிரலில் வேறு வாகனங்கள் பிரவேசிப்பது தொடர்பில் பஸ் உரிமையாளர் சங்கம் முன்வைத்த எதிர்ப்பு தொடர்பில் வானக கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகருமான இந்திய ஹபுகொட தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பு நகரத்துக்குள் பிரவேசிக்கும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் வலது வீதி நிரலில் மாத்திரம் செல்வது தொடர்பான ஒத்திகை இன்று காலை ஆரம்பமானது.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.