கொவிட் - 19 காரணமாக இடைநிறுத்தப்பட்டிறுந்த மக்காவுக்கான புனித உம்ரா யாத்திரையை மீண்டும் ஒக்டோபர் 04 முதல் படிப்படியாக ஆரம்பிப்பதற்கு சவூதி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக எதிர்வரும் ஒக்டோபர் 04 முதல் தினசரி 6,000 உள்நாட்டு யாத்திரிகர்களை உம்ரா பயணத்திற்கு அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், நவம்பர் முதலாம் திகதி முதல் குறித்த எண்ணிக்கையை 20,000 ஆக அதிகரித்து வெளிநாட்டு யாத்திரிகர்களையும் அனுமதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் சவூதி உள்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.