நாட்டில் வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மி.மீ. இற்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை மாலை 06 மணி வரை மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வட, வட மத்திய, வட மேல் மாகாணங்கள், திருகோணமலை மாவட்டம் மற்றும் மலை நாட்டின் மேற்கு பகுதிகளிலும் காற்றின் வேகம் மணிக்கு 50 - 60 கிலோ மீற்றர் ஆக அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வளி மண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.