போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கை சட்டம் இன்று (14) முதல் மேல் மாகாணத்தில் அமுல்படுத்துவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இதன்பிரகாரம் மேல்மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (பொலிஸ் போக்குவரத்து) வழிகாட்டலின் கீழ் வீதி ஒழுங்கை சட்டம் இன்று 14 முதல் 16 ஆம் திகதி வரை கலை 06.00 மணிமுதல் 10.00 மணிவரையான காலப்பகுதியில் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த திட்டம் கீழ்குறிப்பிடப்படும் நான்கு வீதிகளுக்கும் அமுல்படுத்தப்படவுள்ளது.

• ஸ்ரீ ஜயவர்த்தன மாவத்த, பொல்துவ சந்தி முதல் ஹர்டன் பிளேஸ் வரை

• பேஸ்லைன் வீதி, கலணி பாலம் முதல் ஹை லெவல் வீதி வரை

• ஹை லெவல் வீதி, அனுலா கல்லூரி முதல் ஸ்ரீ சம்புதத்வ ஜயந்தி மாவத்த, தும்முள்ள சுற்றுவட்டாரம், தேஸ்டன் வீதி, மார்கஸ் பெர்னாண்டோ மாவத்த, நூலக சந்தி, ஆனந்த குமாரசாமி மாவத்த, மல்பரா சந்தி மற்றும் பித்தல சந்தி வரை

• காலி வீதி, வில்லியம் சந்தி முதல் காலிமுகத்திடல் சுற்றுவட்டாரம் மற்றும் என்எஸ்ஏ சுற்றுவட்டாரம் வரை
வீதி ஒழுங்கை சட்டத்தை பின்பற்றுமாறு சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.