வெலிகந்த, செவனபிடிய பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மாடொன்றுடன் மோதியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக        வெலிகந்த பொலிஸார் (07) தெரிவித்துள்ளனர்.

மரணமடைந்தவர் குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய ஒரு இளைஞர் என்று தெரிய வருகிறது. 

குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்  கொண்டிருக்கும் போது மாடொன்றுடன் மோதியதையடுத்து அருகில் இருந்த மகாவெலி இஸட் - டி கால்வாயில் விழுந்து மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.