பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இன்று முதல் முட்டை விலையை இரண்டு ரூபாவால் குறைக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று முன்தின் தங்காலை கால்டன் இல்லத்தில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் மக்களுக்கு சலுகைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக முட்டை விலையை குறைக்க நடவடிக்கையெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு அமையவே முட்டை விலையை இரண்டு ரூபாவால் குறைக்க முட்டை உற்பத்தியாளர் சங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

முட்டை உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகைகளை கருத்திற் கொண்டு முட்டை விலையை குறைக்குமாறு பிரதமர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய முட்டை விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாகவும் இன்றுமுதல் வெள்ளை முட்டை ஒன்றை 18 ரூபாவுக்கும் சிவப்பு முட்டை ஒன்றை 18.50 ரூபாவுக்கும் முட்டை உற்பத்தியாளர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரான் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

கோழிக் குஞ்சி ஒன்றின் விலை 3.50 ரூபாவாக உயர்வடைந்துள்ளதால்தான் முட்டையின் விலை அதிகரித்துள்ளது. கோழிக் குஞ்சியின் விலையை 1.75 ரூபாவை குறைக்க நடவடிக்கையெடுக்குமாறு பிரதமரிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் மேலும் கூறியுள்ளார். தற்பொழுது கோழி முட்டை 20 ரூபா முதல் 22 ரூபாவரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.