- நூருல் ஹுதா உமர் -

இன்று (02) திறந்தமுறையில் நடைபெற்ற சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருக்கான வாக்கெடுப்பில்

ஏ.எம்.எம்.நௌஷாட் 13 வாக்குகளை பெற்று மீண்டும் தவிசாளராக தெரிவானார். அவரை எதிர்த்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் 7 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டார்.

இந்த வாக்கெடுப்பில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான உறுப்பினர்கள் அனைவரும் ஏ.எம்.எம்.நௌஷாற்கே வாக்களித்துள்ள நிலையில் சுதந்திர கட்சி உறுப்பினர் ஏ.எம். முஸம்மிலும், அ.இ.ம.கா. உறுப்பினர்களான தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட், யு.எல்.அஸ்பர், கோவிந்த சாமி, திருமதி ஷியாமா ஆகியோர் ஏ.எம்.எம். நௌஷாடிற்கு வாக்களித்துள்ளனர்.

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிருடன் தேர்தல் காலம் உட்பட அனைத்து நிலையிலும் மிகவும் நெருக்கமாக இருந்த உறுப்பினரும் ஏ.எம்.எம். நௌஷாடிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.