அச்சாறு (pickle) என்பது இலங்கை முஸ்லிம்களின் திருமணம், கந்துாரி நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத உணவு. இந்தோனேசியைாவைச் சேர்ந்த மலாய் இனத்தவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டாலும், சோனக முஸ்லிம்களால் தயாரிக்கப்படும் அச்சாறுக்கும் மலாய் முஸ்லிம்களால் தயாரிக்கப்படும் அச்சாறுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. 

கொழும்பு அச்சாறுக்கு என்று தனி வரலாறு உண்டு. கொழும்பு மாநகரசை் சேர்ந்த A. C குடும்பத்தினர் அச்சாறு தயாரிப்பதில் பெரும் புகழ்பெற்றவர்கள். உஸ்மானிய கிலாபத்தைச் சேர்ந்த சுல்தான் அப்துல் ஹமீத் அவர்களோடு AC குடும்பத்தினர் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தார்கள்.  நாட்டில் இடம்பெற்ற பெரிய கந்துாரி வைபவங்களுக்கு AC குடும்பம் அச்சாறை இலவசமாக வழங்கி வந்தது. கடந்த 80 வருடங்களுக்கு மேலாக இன்று வரை கஹடோவிடவில் அடங்கியிருக்கும் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவரான அஷ்ஷெய்ஹ்  அப்துல்லாஹ் இப்னு உமர் பாதீப் அல் யமனி றஹ்மதுல்லாஹ் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட நதர் கந்தூரி நிகழ்விற்கும் இவர்களே 80 வருடங்களுக்கு மேலாக அச்சாறை இவர்களே வழங்கி வருகிறார்கள்.

கொழும்பு AC குடும்பத்தவர்களுக்கும் பிரித்தானிய அதிகாரிகளுக்கும் இடையில் நெருங்கி தொடர்பு இருந்துவந்தது. பிரித்தானிய மகாராணியார் எலிசெபத் II மகாராணியின்  திருமண நிகழ்வுக்காக இலங்கை முஸ்லிம்கள் சார்பில் லண்டன் நகருக்கு அச்சாறு அனுப்பிவைக்கப்பட்டது. AC குடும்பத்தின் அன்பளிப்புக்காக நன்றி தெரிவித்து பகிங்ஹாம் மாளிகையிலிருந்து நற்சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது.  (மகாராணியார் அனுப்பி வைத்த சான்றிதழ்அடுத்த பதிவில் இணைக்கப்படும்).

AC குடும்பத்தினர் இன்று "மட்டக்குளி ராதீப் சங்கம்" என்ற பெயரில் தமது ஆன்மீகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.  AC குடும்பத்தின் பணிகளை கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சகோதரர் Kaleelur Rahman அவர்கள் முன் நின்று மேற்கொண்டு வருகிறார்கள். 

AC குடும்பத்தினரும அச்சாறும் பிரிக்கமுடியாத பிணைப்புக்கள்.

பஸ்ஹான் நவாஸ்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.