(சங்கீதன்)

நுவரெலியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த  56 வயதுடைய சுப்பிரமணியம் அந்தகுமார் என்பவர் நேற்று (6) மாலை 5.00 மணியளவில் நுவரெலியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த மாதம் முதலாம் திகதி, டுபாலிருந்து இலங்கையை வந்தடைந்த இவர், நுவரெலியாவில் உள்ள விருந்தகமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இவர் நாடு திரும்பியிருந்ததுடன், நுவரெலியாவில் உள்ள  விருந்தகம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது,  சுகவீனம் ஏற்படவே இவர் 2ஆம் திகதி,  நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின், உயிரிழந்துள்ளார்.

இவருக்கு கொரோனா தொற்று தொடர்பான எவ்விதமான அறிகுறியும் இல்லை என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளதுடன்.இவருடைய உயிரிழப்புக்குக்  காரணம் இவருடைய உடலில்  ஏற்பட்டிருந்த வைரஸ் தொற்று  மற்றும் நீரிழிவே என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இவருடைய சொந்த இடம் கொழும்பு என்ற போதிலும் இவருடைய உடலை இன்று நுவரெலியா மாநகர சபை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.