கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை எதிர்வரும் செவ்வாய் கிழமை முதல் சாதாரணமாக நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பல கட்டங்களாக ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகளின் ஆரம்ப வகுப்புகள் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல், 6 ஆம் தரம் முதல் 13 தரம் வரை வகுப்புகளுக்கு வழக்கம் போல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதேவேளை பாடசாலை மாணவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதைத் தவிர்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் அவ்வாறு தொடர்ந்தும் சுகாதார வழிகாட்டல்களை புறக்கணித்து நடந்தால் மீண்டும் சமூக மட்டத்தில் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.