கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த உடல்களை எரிப்பது குறித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

சிசிர டீ அப்ரூ தலைமையிலான மூவரங்கிய நீதியரசர் குழுவினால் இன்றைய தினம் (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவின் பிரதிவாதிகளான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயம், சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் கிடைக்கவில்லை என்றும் அவர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்புவதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை எரிக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள வழிகாட்டல்களின்படி கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்களை புதைக்கவும், எரிக்கவும் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.