2020 ஆம் கல்வி ஆண்டுக்காக 2018 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுக்கு அமைய தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை சேர்த்துக் கொள்வது குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகியுள்ளது.

 https://moe.gov.lk/admissions-to-national-colleges-of-education-2020/ என்ற இணைப்பின் ஊடாக எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் இதற்காக விண்ணப்பிக்கமுடியும்.

ஒன்லைன் (Online) ஊடாக விண்ணப்பித்தல் குறித்த மேலதிக தகவல்கள் மற்றும் ஏற்படும் சிக்கல்கள் குறித்து 0112 787303 அல்லது 0112 787385 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நாடு பூராகவும் உள்ள 19 தேசிய கல்வியியல் கல்லூரிகளில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் இடம்பெறும் 50 பாடநெறிகளுக்காக 4,253 பயிலுனர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.