இம்முறை அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இரண்டு ஆண் மாணவர்கள் (ஒலுவில்) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு தெரிவானதையிட்டு அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று நேற்றைய தினம் (04) கஹட்டோவிட்ட முஹிய்யத்தீன் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.

ஆண் மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவு வீதம் குறைந்துள்ள இக்காலகட்டத்தில் இவ்விரு மாணவர்களினதும் பல்கலைக்கழகத்துக்கான தெரிவு உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். கஹட்டோவிட்ட அல் பத்றியா மகா வித்தியாலயத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்ற மொஹம்மத் ஆஸிர் அன்வர் மற்றும் மொஹம்மத் ஹஸ்ஸான் பவ்ஸான் ஆகியோர் இம்முறை ஆண் மாணவர்கள் சார்பில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் முஹிய்யத்தீன் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற பயான் நிகழ்வொன்றின் பின்னால் இந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் முஹிய்யத்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் பிரதம கதீப் மௌலவி பர்ஸான் முர்ஸி அவர்களாலும், காதிரிய்யதுன் நபவிய்யா தரீக்காவின் ஆலிம்களுள் ஒருவராகிய அப்துல் பாரி ஆலிம் (B.A. Kuwait) அவர்களின் கரங்களாலும் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட அல் ஹாஜ் அப்துல் ஹாதி  ஆகியோராலும் ஆசீர்வதிக்கப்பட்டு நினைவுச்சான்றிதழையும் பல்கழைக்கழக நுழைவு பத்திரத்தையும் மொஹம்மத் ஆஸிர்,மொஹம்மத் ஹஸ்ஸான் ஆகியோர்களுக்கு கூட்டாக வழங்கி வைப்பதையும் அருகில் நேற்றைய தினம் பயான் உரை நிகழ்த்திய மௌலவி அஹ்மத் மஹ்ழரி காணப்படுவதையும் , சபையோரால் கஸீதா இசைக்கப்படுவதையும் இதற்கு முன்பு பல்கலைக்கழகம் நுழைந்த மொஹம்மத் இக்ராம் நிகழ்வுகளை தொகுத்து வழங்குவதையும் இறுதியில்  பள்ளிவாசல் கதீபினால் துஆ பிரார்த்தனை செய்வதையும் படங்களில் காணலாம்.

இந்த பயான் நிகழ்வையும் பாராட்டு வைபவத்தையும் கஹட்டோவிட்ட பாதிபீயன்ஸ் இளைஞர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், குறித்த இரு மாணவர்களும் அந்த இளைஞர் கழகத்தின் அங்கத்தவர்கள் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

நன்றி - Kahatowita News Page Official









கருத்துரையிடுக

Blogger இயக்குவது.