கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்ய வாக்களித்த மக்கள் தற்போது அது குறித்து கவலைப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்றவை மீண்டும் நடந்து வருவதையே காணக் கூடியதாக உள்ளது.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு மீண்டும் குடும்ப அரசியலை ஏற்படுத்தி நாட்டை அழிக்க மேற்கொள்ளும் முயற்சியை மக்கள் எதிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற ரீதியில் நாடு தற்போது செயற்படுவதில்லை. ஆளும் கட்சியினருக்கு ஒரு சட்டம், எதிர்க்கட்சியினருக்கு ஒரு சட்டம் என்ற ரீதியில் செயற்பட்டு வருகின்றனர் எனவும் ஹர்சன ராஜகருண குறிப்பிட்டுள்ளார்.

(ஸ்டீபன்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.