தேங்காயினை அளவீட்டு பட்டி கொண்டு அளந்து விலையினை கணிப்பது சாத்தியமற்ற விடயம் எனவும், தற்போது நாட்டில் தேங்காயும் அளவீட்டு பட்டியும் கேலிக்குரிய விடயங்களாக மாறியுள்ளதாகவும், இது குறித்து தான் வருத்தமடைவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

எவரோ எடுத்த சாத்தியமற்ற இத்தீர்மானத்திற்கு 99 வீதமானோர் இணங்கவில்லை. இது தொடர்பாக அமைச்சரவையிலும் கலந்துரையாடப்பட்டது. சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.