சீனாவின் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.12 கோடியைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9.64 இலட்சத்தைக் கடந்துள்ளது.கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 400-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.28 கோடியைக் கடந்துள்ளமை குறிபிடத்தக்கது.
அமெரிக்காவில் மேலும் 33,344-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளது. பிரேசிலில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்தை தாண்டியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம்