உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ சாட்சியம் வழங்கியுள்ளார்.

தாக்குதல் நடத்தப்படலாம் என தனது தந்தை முன்கூட்டியே அறிந்திருந்தாக ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்த கருத்து தொடர்பிலேயே அவர் சாட்சியம் வழங்கியுள்ளார்.

நாட்டின் கத்தோலிக்க தலைவர் ஒவ்வொரு உயிர்த்த ஞாயிறு திருப்பலி ஆராதனையையும் காலை வேளையிலேயே நடத்திய நிலையில் கடந்த வருடம் மாத்திரம் அவ்வாறு நடத்தவில்லை என அவர் கூறினார்.

தாக்குதல் குறித்து ஏற்கனவே அறிந்து வைத்திருந்தாலா? அவர் அவ்வாறு திருப்பலியை நடத்த வில்லை எனவும் எனவே இது குறித்து விசேட விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரினார்.

அப்போது கொழும்பு பேராயர் சார்பில் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாமில் பெர்ணான்டோ, ஹரீன் பெர்ணான்டோவிடம் பேராயர் ஒவ்வொரு வருடமும் உயிர்த்த ஞாயிறு திருப்பலியை அந்த நாளுக்கு முன்தினமான அதாவது சனிக்கிழமையே நடத்தினார் என கூறினால் அதை ஏற்றுக்கொள்வீர்களா? என வினவினார்.

அதற்கு பதிலளித்த அவர், தான் மேலே சொன்ன விடயம் அடிப்படையற்றது எனவும் சடுதியாக தன் நினைவில் பட்டதை கூறியதாகவும் அதற்கு எதுவித ஆதரமும் இல்லை என ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

எவ்வாறாயின் ஹரீன் பெர்ணான்டோ வழங்கிய சாட்சியம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

´இது தொடர்பில் உண்மையில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். எனது தந்தைக்கு தொலைப்பேசியில் தாக்குதல் குறித்து அறிவித்தவர் யார் என்பதை அறிந்து வைத்துள்ளனர்.

இந்த பிரச்சினையை பயன்படுத்தி என் மீது முடியுமானவரை சேறு பூசினர். ஆனால் இப்போது உண்மை வெளியில் வந்துள்ளது. நான் தான் முதுகெலிம்புடன் அரசாங்கம் இதற்கு பொறுப்பு சொல்ல வேண்டும் என கூறினேன். ஏல்லா விடயங்களையும் முன்வைத்தேன். வேண்டுமாயின் ஊடகங்கள் சந்தோசப்படலாம் என்றார்.

Adaderana

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.