ஏ.எம்.ஏ.பரீட்

அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள  மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் இன்று (29) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,  “அன்று எமது நல்லாட்சி அரசாங்கம் தேங்காய்க்கு நிர்ணய விலை நிர்ணயித்த போது, அதை விமர்சித்தவர்களே இன்று தேங்காயின் அளவுக்கு ஏற்ப விலையை நிர்ணயம் செய்துள்ளார்கள்” என்றார்.

“இதனால் நாம் தேங்காய் வாங்கச் செல்லும்போது டேப் உடன்தான் கடைக்குச் செல்ல வேண்டும்.  தேங்காய் அளவுக்கு ஏற்ப விலை நிர்ணயித்ததை நாம் கிண்டல் செய்யவில்லை. ஆனால், தேங்காயின் அளவை பொறுத்து விலையை நிர்ணயிப்பது முட்டாள்தனம்.

“இப்பொழுது சந்தைகளில் அத்தியாவசிய பொருள்கள் அனைத்தினதும் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளன. அரசின் பொருத்தமற்ற பொருளாதாரக் கொள்கைகளால் இந்த விலை அதிகரிப்பைக் கட்டுபடுத்த முடியாது.

“எனவே, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள  மக்களுக்கு உடனடியாக அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.