பெரும்பான்மை சமூகத்தினர் பேராதரவோடு செயல்படும் அரசின் செயற்பாடுகளை ஒரு சிறுபான்மை சமூகமாக பார்வையிடும்போது அச் செயற்பாடுகளின் உண்மை வடிவம் அதன் நிறைவிலே  எமக்கு தெளிவுபெறும்.

இவ் அரசின் செயற்பாடுகளுக்கு பல்வேறு சாதக பாதக கருத்துக்கள் காணப்பட்டாலும் பட்டதாரி நியமனம், அதன் பயிற்சி தொடர்பில் வீணான பாதக பார்வையிலிருந்து அச்சம் மற்றும் மத ரீதியாக சம்பந்தப்படுத்தலை தவிர்த்து சாதகமான  பார்வையில் நோக்குமிடத்து தெளிவுகள் கிடைக்கும்.

தொடர் எதிர்ப்பலைகள்

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் 'சஃபாக்யே டெக்மா' (செழிப்பு மற்றும் சிறப்பின் விஸ்டாஸ்) சிறப்பு திட்டத்தின் கீழ் சமீபத்தில் அரசாங்க வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 50,000 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இலங்கையில் உள்ள 51 இராணுவ முகாம்களில் 21 நாள்  தலைமை மற்றும் ஊக்க பயிற்சி பெறுகின்றனர். ஆனால் தொழிற்சங்கங்களும் பல அரசியல் கட்சிகளும் போதிய வழிகாட்டலற்ற திட்டங்களினால் இந்த நடவடிக்கையை கேள்விக்குரியாக்கியிருந்தனர். மேலும்   இது சமூகத்தை இராணுவமயமாக்கும் அரசாங்க மூலோபாயத்தின் ஒரு பகுதியா எனவும் கேள்வியெழுப்பியிருந்தனர் .

இலங்கையின் புதிய அரசாங்கம், வேலையின்மை விகிதத்தை 4% க்கும் குறைக்கும் நோக்கில் அதன் தேர்தல் உறுதிமொழிக்கு ஏற்ப சுமார் 50,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு  வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. உண்மையில் கடந்த அரசில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏமாற்றம் அடைந்திருந்த பட்டதாரிகளுக்கு புத்துயிர் அளிப்பதாக அரசின் இத்திட்டம் அமைந்திருந்தது. செப்டம்பர் 14 முதல், இலங்கை அரசாங்கம் சமீபத்தில் அரசாங்க வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்கு இராணுவ நோக்குநிலை-பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் பாதுகாப்பு அமைச்சகத்தால் கண்காணிக்கப்படும் மற்றும் இராணுவத்தின் ஒரு கிளையான பாதுகாப்பு படையால் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்பார்வையிடப்பட்டுவருகிறது.

அண்மையில்  கொழும்பில் ஒரு ஊடக மாநாட்டில் பேசிய முன்னணி சோசலிஸ்ட் கட்சியின் (FSP) பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவா கூறினார்: 'இந்த பட்டதாரிகளுக்கு பயிற்சி தேவை என்பது உண்மைதான். ஆனால் அது இராணுவத்தால் செய்யப்படக்கூடாது.  இது பொது நிர்வாக அமைச்சினால் வழங்கப்பட வேண்டும். ' எனவும் இந்த பயிற்சி சமூகத்தை இராணுவமயமாக்கும் அரசாங்கத்தின் மூலோபாயத்தின் ஒரு பகுதியா? எனவும்  அவர் கேள்வியெழுப்பினார் . இராணுவப் பயிற்சித் திட்டம் பொதுமக்களால் எதிர்க்கப்படாவிட்டால், பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சியை அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தும் என்று நாகமுவா கூறினார் . கடந்த 2011 முதல் காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள்  பல வாரங்கள் இராணுவப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பின்னர் ஆட்சி  மாற்றத்தைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய திட்டம் 2015 இல் நிறுத்தப்பட்டது.

இதேபோல்  வேலையற்ற பட்டதாரிகளின் ஒருங்கிணைந்த சங்கத்தின் (ஊயுருபு) இ வண. தென்ன ஞானநந்தா தேரோஇ இராணுவப் பயிற்சிக்கு பதிலாக முறையான பொது நிர்வாக பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் கூறியிருந்தார்.

உண்மையில் இத்திட்டத்தின் மூலம் அரசு எதிர்பார்ப்பதென்ன?

அரசாங்கத்தின் கூற்றுப்படிஇ இராணுவப் பயிற்சியின் நோக்கம், சமீபத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளின் அறிவுஇ திறன்கள் மற்றும் அணுகுமுறைகளை மேம்படுத்துவது ஆகும். அரசாங்க ஊழியர்கள் சம்பந்தமாக  பொது மக்களின் மத்தியில் நிலவும் கருத்து என்னவென்றால், அவர்கள் குறைவான செயல்திறன் கொண்டவர்கள் மற்றும் திறனற்றவர்கள்இஇதனை இல்லாதொழித்து செயல் திறன்மிக்க அரச ஊழியர்களை உருவாக்கவே இத்திட்டம் என அரசு கூறியுள்ளது.

இதுவரை காலமும் அரச பொதுத்துறைப்பணியில் எதிர்நோங்கிய விசனங்கள் சில:

ஆளுமை மிக்க அரச ஊழியர்கள் பற்றாக்குறை 

ஒரு சிறிய விடயத்தினை செய்து முடிக்க நீண்ட கால எல்லை எடுத்துக்கொள்ளல் 

ஒரு பணியினை செய்து முடிக்க மிதமிஞ்சிய ஆளணி 

நேர முகாமைத்துவமின்மை, காலத்திற்கேற்ப தொழிநுட்ப அறிவின்மை 

உரிய பொறிமுறை இன்மையால் ஆளணி தேவைக்குரிய துறைக்கு ஆட் சேர்ப்பு செய்யாமல் ஒரு சில துறைக்கே தொடர்ச்சியாக ஊழியர்கள் உள்ளீர்க்கப்பட்டமை

அரசதுறை தனியார் துறையை விட கீழே உள்ளது  

போன்ற இன்னும் அதிகதிகமான விசனங்களை நாம் கடந்த காலங்களில் கடந்து வந்துள்ளோம்.

இவ் அரசு தெட்டத்தெளிவாக மேலே கூறிய இவ்வாறான எதிர்மறையான கருத்துக்களை பொதுத்துறையிலிருந்து அகற்றவே இத்திட்டத்தில் நோக்கம் என கூடியிருந்தனர். இருந்தாலும் இத்திட்டத்தில் மேற்கோள் காட்டி எம்மிடையே கேட்கப்பட்ட முக்கிய விடயங்கள் பின்வருமாறு 

இணைக்கப்பட்ட பட்டதாரிகளில்  38760 பேர் பெண்கள் 

அதில்  75% மேற்பட்டோர் திருமணமானவர்கள் 

அதில் அதிகமானோர் 1-5 வயது குழந்தைகளை உடையோர்.

போன்ற கரங்களினால் தன்  குடும்பம் குழந்தைகளை பிரிந்து எவ்வாறு வதிவிடப்பயிற்சிக்கு செல்ல முடியும் என்ற கேள்வியே எம்மிடையே காணப்பட்ட பிரதான கேள்வி அதிலும் இக்கேள்வி சிறுபான்மையிநர் மத்தியில் அதிகமாகவே கிசுகிசுக்கப்பட்டது.

சில பட்டதாரிகள் கர்ப்பிணிப் பெண்கள் பங்கேற்பது கடினம் என்று கூறி இராணுவப் பயிற்சி குறித்து ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். ஆனால்  ஊனமுற்றோர் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் பயிற்சி காலத்தில் சிறப்பு கவனிப்பையும் கவனத்தையும் பெறுவார்கள் என்று ராணுவம் பதிலளித்திருந்தது .

பெண்கள் அதிகம் இருப்பது இத்திட்டத்தில் மட்டுமல்ல முழு இலங்கையிலும் சனத்தொகை, பொதுத்துறையில் அதிகமாக  இருப்பது பெண்களே என கணக்கெடுப்பு கூறுகின்றது. அத்தோடு அரச அலுவலகங்கள், நாட்டின் அபிவிருத்திக்கு  பெண்களின் பங்கு இன்றியமையாதது. ஆகவே பெண்களுக்கும் தலைமைத்துவப் பயிட்சி வழங்கப்படுவது முக்கியத்துவமே. அத்தோடு இத்திட்டம்  பெரும்பான்மை, சிறுபான்மையை என்ற பேதமின்றி அனைவருக்குமே வழங்கப்படுகிறது.

'தலைமைத்துவமும் குழு கட்டமைப்பும் '

21 நாள் வதிவிட  திட்டம் ஒவ்வொரு கட்டத்திற்கும் 10,000 பட்டதாரிகள் தற்போது ஐந்து மாதங்களுக்குள் அரசு வேலைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் 50,000 பட்டதாரிகளை உள்ளடக்குவார்கள். இது விரிவுரைகள், கலந்துரையாடல்கள், வெளிப்புற பயிற்சி நடவடிக்கைகள், குழு கட்டமைத்தல், ஆய்வு சுற்றுப்பயணங்கள் மற்றும் கள ஆய்வுகள் மூலம் ஆறு சுயாதீனமான ஆனால் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய தொகுதிகள் கொண்டது. 

இதில் தலைமைத்துவ பயிற்சிஇ மற்றும் 'ஒத்திசைவு மற்றும் பின்னடைவு' மற்றும் மேலாண்மை திறன்இ தனியார் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களில் பயிற்சி, அத்துடன் திட்டப்பணி ஆகியவை அடங்கும்.

ஏன் இராணுவம்?

இத்திட்டத்தில் தலைமைப்படுவப் பயிற்சி வழங்கப்படுகிறது என்பதை விட அது இராணுவத்தினரால் வழங்கப்படுகிறது என்ற விசனமே அதிகளவில் எழுந்திருந்தது. உண்மையில் இத்திட்டத்திற்கு இராணுவத்தினரை பயன்படுத்தியமைக்கு 03 முக்கியமான காரங்களை சுட்டிக்காட்டலாம்.

கடந்த Covid-19 சூழ்நிலையில் உலகமே அச்சமடைந்த விரண்டோடிய நிலையில் அதனை எதிர்த்து வெற்றி அடைந்த நாடுகளுள்  ஒரே ஒரு தென்னாசிய நாடு இலங்கை என்பது யாவரும் அறிந்தது. அதுமட்டுமல்ல Covid-19 சூழ்நிலையில் எமது நாடு பாராளுமன்றமோ பிரதமரோ இல்லாமல் ஜனாதிபதியின் கீழ் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலே இதனை செய்து முடிந்திட்டிருந்தனர். எனவே இயல்பாகவே சேவை, அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவம் இராணுவத்தினரிடம் காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் அரச ஊழியர்களில்  விமர்சிக்கப்பட்ட நேரமுகாமைத்துவம், அர்ப்பணிப்பு சகிப்புத்தன்மை இபொறுமை என்பவற்றை கற்றுத்தர நானறிந்து இராணுவத்தினரை விட சிறந்தவர்கள் இருக்கமுடியாது.

இலங்கை இராணுவம் அர்ப்பணிப்பு, ஆர்வம், தன்னம்பிக்கை, புதுமை, நெகிழ்வுத்தன்மை, காட்சிப்படுத்தல், சமூகத்தில் மரியாதை மற்றும் அங்கீகாரத்தை வழங்கும் ஒரு சிறந்த செயற்திறன் மிக்க அரச ஊழியர் சமூகத்தை உருவாக்குக் முயட்சியை பாராட்டுகிறேன்.

இவ் அரசு  கடந்த அரசாங்கங்களை களை போல் நியமங்களை பிரதேச செயலகங்களுக்கு மட்டும் செய்யாமல் உரிய பொறிமுறையுடன் ஆளணி தேவைப்படும் துறைக்கு துறைசார் பட்டதாரிகளை நியமிக்கும் முயற்சியை மேட்கொண்டுள்ளது. உண்மையில் இவ் அரசின் இச்  செயற்திட்டம் தனியார் துறைக்கு ஒப்பான  அரச ஊழியர்களை உருவாக்குவதே என்பதாகும். வெளி நாடுகளை போன்று வினைத்திறனான சேவையாளர்களை உருவாக்கும் முயச்சியை சாதகமான பார்வையில் நோக்கி சிறந்த சமூகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்.

KM.றினோஸ்(BSW)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.