மாடறுப்பதை தடை செய்வது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டாலும் முடிவுகள் எடுக்கப்படவில்லை - மஸ்தான் எம்பி

Rihmy Hakeem
By -
0

 


நேற்றைய தினம் (08) நடைபெற்ற ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் இறைச்சிக்காக மாடறுப்பதை தடைசெய்வது தொடர்பில் பிரதமர் யோசனை முன்வைத்தாலும் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. எவரும் யோசனை கூறவில்லை என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அரச ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். 

மேலும் இது குறித்து அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, மாடறுப்பதை தடை செய்வதற்கு நாட்டில் வரவேற்புள்ளது. உள்நாட்டில் பால் உற்பத்தியில் தன்னிறைவு காண திட்டமிடப்பட்டுள்ளது. காளை மாடுகள் அறுக்கப்படுவதால் தட்டுப்பாடுகள் ஏற்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த கூட்டத்தில் 13வது திருத்தத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துக்களும் முன்வைக்கப்பட்டதாக தெரியவருகிறது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)