(ரிஹ்மி ஹக்கீம்) 

மாத்தறை, பொல்ஹேன பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

குறித்த நபருடன் சேர்த்து 15 ரஷ்யர்கள் கடந்த 13 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 

இன்றைய தினம் (24) தமது நாட்டுக்கு பயணிக்க இருந்த நிலையில் நேற்றைய தினம் இரவு மேற்கொண்ட பீ.சி.ஆர். பரிசோதனையின் முடிவில் அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

குறித்த தொற்றாளர் தற்போது ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர் தங்கியிருந்த ஹோட்டலின் 23 பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக ஹபராதுவையில் உள்ள நிலையத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.