கடவத்தை - மீரிகம நெடுஞ்சாலை நிர்மாண பணிகள் ஆரம்பம் : 1500 பேருக்கு தொழில்வாய்ப்பு - சீன தூதரகம்

Rihmy Hakeem
By -
0


 மத்திய அதிவேக நெடுஞ்சாலையின், கடவத்தை - மீரிகம வரையான பகுதியின் நிர்மாணப்பணிகள், நேற்றைய தினம் 15) ஆரம்பமாகியுள்ளன.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதற் கட்ட நிர்மாணப் பணியாக  இது அமைந்துள்ளது. சீனாவின் எக்சிம் வங்கின் 989 மில்லியன் டொலர் செலவில், மேற்படி நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படுகிறது.

மேலும், Metallurgical Corporation என்ற  நிறுவனமே இதன் பிரதான ஒப்பந்தக்காரராகச் செயற்படுகிறது.

மேற்படி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்தின்போது, 1,500 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புகள்  கிடைக்குமென, இலங்கையிலுள்ள  சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)