கிழக்கு கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான ‘எம்டி நியூ டயமண்ட்’ கப்பலின் கேப்டனை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதிவான் நீதிபதி பிரியந்தா லியானகே செப்டம்பர் 28 ஆம் திகதி கேப்டனை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் கோரிக்கையை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கப்பலின் கேப்டன் தற்போது காலியில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கப்பல் உரிமையாளர்களிடம் 340 மில்லியன் ரூபா நட்டஈடு கோரிக்கையொன்றை சட்டமா அதிபர் சமர்ப்பித்துள்மை குறிப்பிடத்தக்கது.

(Kesari)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.