M.T.New Diamond மசகு எண்ணெய் கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக இந்திய கரையோர பாதுகாப்பு திணைக்களம் சற்று நேரத்துக்கு முன்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்த செய்தியினை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம்.அப்துல் லத்தீப் அவர்களும் உறுதிப்படுத்தினார். 

இருப்பினும், அம்பாறை மாவட்ட கரையோர மக்கள் இவ்விடயம் தொடர்பாக தொடர்ந்து அவதானத்துடன் இருப்பது அவசியம் என்பதனையும் அவர் சுட்டி காட்டினார்.

48 மணித்தியாலங்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட இந்த பணியில் 6 இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல்கள், 6 இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை கப்பல்கள் மற்றும் 4 விமானங்கள் இந்த நடவடிக்கையில் இணைந்திருந்தன.


அம்பாறை மாவட்டத்தில், சங்கமன் கண்டி கடற்பரப்பில் பயணித்து கொண்டிருந்த குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு 270,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதில் இலங்கை கடற்படை, விமானப்படை, இந்திய கரையோர காவல் படையினர் முழு மூச்சாக செயற்பட்டனர்.

இரவு 7 மணிக்கு தீயணைக்கும் பணியில் இணைந்த ALP Winger இழுபறி தற்போது இலங்கை கடலுக்கு அப்பால் கப்பலை இழுத்து செல்வதாகவும் இந்திய கடற்கரை பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


இலங்கை கடற்பிராந்தியத்திற்கு ஏற்படவிருந்த மிகப்பெரிய சூழலியல் ஆபத்தும், கடல் மாசடைதலும் தடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் தொடர்ந்தும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.