கிழக்கு கடல் எல்லைப் பகுதியில் சமீபத்தில் தீப்பற்றிக் கொண்ட MT Diamond  கப்பலின் மாலுமியை சந்தேக நபராக பெயரிடுவதற்கும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சட்டச் சார்பான முன்னறிவிப்பபை - பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் தப்புள டி.சி. லிவேரா குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பான தகவலை சட்டமா அதிபரின் இணைப்பாளரான சட்டத்தரணி நிஷாரா ஜயரட்ண தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டு இலக்கம் 35 இன் கீழான சமுத்திர மாசடைவதை தடுக்கும் சட்டத்தின் 25, 26,38 மற்றும் 53 போன்ற சரத்துக்களின் கீழ் தண்டனை பெறக்கூடிய குற்றங்கள் தொடர்பில் போதுமான விடயங்கள் குறித்து நியாயமான சந்தேகம் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பது சட்டமா அதிபரின் நிலைப்பாடாகும்.

இது குறித்து சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளமை குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை இடுமாறும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.