(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

19 ஆவது திருத்தத்தில் இருக்கும் சுயாதீன ஆணைக்குழுக்களை மேலும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மாறாக ஆணைக்குழுக்களை இல்லாமலாக்கி நாட்டை அழிவுக்கு கொண்டு செல்லக் கூடாது என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று தேர்தல் ஆணைக்குழுவின் செயற்திட்ட அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்பட்டதால் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் வன்முறைகள், மோசடிகள், படுகொலைகள் இடம்பெறாமல் தடுக்க முடிந்தது. ஆனால் வரலாற்று நெடுகிலும் தேர்தல் காலத்தில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் தேர்தல் ஆணைக்குழுவை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு தங்களுக்கு தேவையான முறையில் செயற்படுத்தி வந்திருக்கின்றது.

ஆனால் அரசாங்கம் சமர்ப்பித்திருக்கும் 20ஆவது திருத்தத்தில் ஆணைக்குழுக்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலை ஏற்பட்டால் பழையபடி தேர்தல் காலங்களில் வன்முறைகளும் மோசடிகளும் கொலைகளுமே இடம்பெறும் என்றும் மேலும் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.