-எஸ்.கார்த்திகேசு-

அம்பாறை - பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோமாரி ஹளுகொல பகுதியில் நேற்று (26) மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள், கடைகள் சேதமடைந்ததுடன், பாரிய மரங்கள் சரிந்து விழுந்தமையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மின்சாரமும் முற்றாகத் தடைப்பட்டது.

இந்தத் திடீர் அனர்த்தம் காரணமாக, ஹளுகொல கிராமத்தில் மூன்று வீடுகளும் ஒரு கடையும் சேதடைந்துள்ளன.

இதைத் தொடர்ந்து பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசீத், உதவிப் தவிசாளர் பி.பார்த்திபன், சபை உறுப்பினர் ரி.சுபோதரன், கோமாரி இராணுவ முகாம் படையினர் சம்பவ இடத்துக்கு விரைத்து, நிலைமைகளை பார்வையிட்டனர்.

வீதியில் சரிந்து இருந்த மரங்களை இராணுவத்தினர் வெட்டி துப்பரவு செய்து, பொத்துவில் - அக்கரைப்பற்று பிரதான வீதியின் போக்குவரத்தை சீர்செய்தனர்.

அனர்த்தம் தொடர்பாக பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், அப்பகுதி கிராம சேவை உத்தியோகத்தருடன் தொடர்புகொண்டு, நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன், சேத விவரங்களை தமக்கு சமர்ப்பிக்குமாறும் கோட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.