தீஷான் அஹமட்

சம்பூர் விதுர கடற்படை கொரோனா தடுப்பு முகாமில் தடுப்புக் காவலில் பரிசோதனை செய்யப்பட்டு வந்த சுமார் 100 கொரோனா சந்தேகநபர்களில், நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தொற்று நோயாளர்கள் பரிசோதிக்கப்பட்டு, நேற்று  (22) இரவு கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வை.ஜெஸ்மி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே, மேற்படி நால்வருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.