ஆரோக்கியமான குடும்ப கட்டமைப்புக்கான பொதுநல மன்றம் (WFHFS) இன் ஏற்பாட்டில் "சமகால குடும்ப கட்டமைப்பு எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்" எனும் தலைப்பிலான சமூக விழிப்புணர்வுக் கருத்தரங்கு எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி வியாழக்கிழமை (போயா தினம்) காலை 08.30 மணியளவில் திஹாரிய Lafsons Reception Hall இல் நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் முன்னாள் உதவி பரீட்சைகள் ஆணையாளரும் காதி நீதவானுமாகிய ஏ.எஸ்.மொஹமட், பாதிஹ் கல்வி நிறுவன விரிவுரையாளர் கலாநிதி ரவூப் ஸைன், கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபிஈ நிலையத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அப்துல் முஜீப்,"LEAD" நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் யூ.கே.ரமீஸ், கம்பஹா மாவட்ட ஜம்இய்யதுல் உலமா கிளையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.என்.சைபுல்லாஹ்,  திஹாரிய கிளை செயலாளர் அஷ்ஷெய்க் அம்ஜத் ரஷாதி, அஷ்ஷெய்க் முனீர் முளப்பர் மற்றும் அஷ்ஷெய்க் ஸெய்யித் ஹசன் (செயலாளர் - WFHFS) உள்ளிட்ட பல பிரமுகர்கள் வளவாளர்களாகவும், அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.