கம்பஹா, திவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

குறித்த பெண் சுகயீனம் காரணமாக கடந்த தினம் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் குணமாகி வைத்தியசாலையில் இருந்து வௌியேறும் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கம்பஹா வைத்தியசாலையின் பணிபுரியும் 15 பேர் மற்றும் குறித்த பெண் தொழில் புரியும் மினுவாங்கொட தனியார் நிறுவனத்தின் சுமார் 400 ஊழியர்ளையும் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த தனியார் நிறுவனத்தின் கட்டிடத்திற்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த பெண் பிரயாணம் செய்த பஸ்ஸிலிருந்த 40 பயணிகள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்படுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் திவுல்பிட்டிய உட்பட மினுவாங்கொட பொலிஸ் பிரிவை சேர்ந்த ஊர்களுக்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.