கொரோனா பாதிப்புக்குள்ளான 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு வைத்தியசாலையில் இருந்து பரீட்சை எழுதும் வாய்ப்பு!

Rihmy Hakeem
By -
0

 


கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் 5 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஐவரும் சிகிச்சைகளை பெற்றுக்கொண்டே குறித்த வைத்தியசாலை வளாகத்தில் தமது பரீட்சைக்கு தோற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)