ஒருத்தொகை ஆபாச இறுவட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (02) மாலை நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டி இறுவட்டு விற்பனை நிலையமொன்றுக்கு ஆபாச இறுவட்டுக்களை விற்பனை செய்ய கொண்டு வந்த பிலிமத்தலாவை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 176 இறுவட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவர்களுக்கு இலக்கு வைத்து 200 தொடக்கம் 300 ரூபாய்க்கு மேற்படி ஆபாச இறுவட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர்கள் நாவலபிட்டி நீதவான் நீதின்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(சதீஸ்குமார்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.