இலங்கையில் இரு மணித்தியாலங்களுக்கு ஒரு குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிறது - DIG பிரியந்த

Rihmy Hakeem
By -
0

 


இலங்கையில் சராசரியாக ஒவ்வொரு இரண்டு மணித்தியாலங்களுக்கும் ஒரு குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ´உங்களால் நம்ப முடியாத விடயம் ஒன்றை கூறுகிறேன். இந்த தீவில் ஒவ்வொரு இரண்டு மணித்தியாலங்களுக்கும் ஒரு குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றது. இன்று இந்த நிகழ்வு 4 மணித்தியாலங்கள் இடம்பெறும். இந்த 4 மணித்தியாலங்களில் நாட்டில் எங்காவது இடங்களில் இரண்டு குழந்தைகள் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்' என்றார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)